Designed by Iniyas LTD
யாழ் மிருசுவிலில் தந்தை மற்றும் மகன்மீது இனம் தெரியாதகுழு தாக்குதல்…
யாழ் மிருசுவிலில் தந்தையையும், மகனையும் இடைமறித்த இனம் தெரியாத குழு நடத்திய சரமாரித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
குறித்த இருவரும் வயலில் வேலையை முடித்துக் கொண்டு மோட்டார்ச் சைக்கிளில் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.