Designed by Iniyas LTD
ஆப்கானிஸ்தானில் ஒட்டு போட சென்ற 170 பேர் பலி..
நேற்று முன் தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்ட தோடு அங்கு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதில் 170 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
250 உறுப்பினர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நேற்றையதினம் இடம்பெற்றது.
வாக்காளர்கள் பெருமளவில் உற்சாகத்துடன் திரண்டு வந்து வாக்குச் சாவடிகளில் காத்திருந்தனர்.
இதனால் பயங்கரவாதிகள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டதோடு, ஆங்காங்கே வெடிகுண்டு மற்றும் ராக்கெட் தாக்குதல்களையும் அவர்கள் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக காபூல், காந்தகார், நங்கார்ஹர், குண்டூஸ், ஹெல்மாண்ட் மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகள் ஓட்டுச் சாவடிகளை குறி வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதோடு தலைநகர் காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.
தொடர்புடைய பதிவு
318 ஓட்டுப்பதிவு மையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் 350-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நேற்று திட்டமிட்டபடி ஓட்டுப்பதிவு நடக்கவில்லை என்பதனால் குறித்த பகுதிகளில் நேற்றையதினம் வாக்குபதிவுகள் இடம்பெற்றதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.