தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னத்துடன் பலருக்கும் அழைப்பு கடிதங்கள்

தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வு நாளைமறுதினம்   யாழில் நடைபெறவுள்ள நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னத்துடன் பலருக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாபெரும் எழுச்சி தலைவன் வழியில் மக்கள் மேலவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம்“ எனப் குறிப்பிடப்பட்டு தமிழ் மக்கள் பேரவையால் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ் மற்றும் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேச அடுத்த கட்ட அறிவிப்பும் நாளை மறுதினம் யாழ் நகரிலுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இதற்கான அறிவிப்பு தமிழ் மக்கள் பேரவையால் பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே , குறித்த அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...