தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அல்லைப்பிட்டியில்  பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிப்பு – சீன நாளிதழ்..

யாழ்  அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளதாக சீனாவில் இருந்து வெளியாகும் ‘சைனா டெய்லி’  செய்தி வெளியிட்டுள்ளது.

இது சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் பண்டைய கடல்சார்  இணைப்புகளைக் காட்டுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை,  கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையில்   மேற்கொண்டிருந்தனர்.

அதன்படி துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாட்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.

இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, சீன  அருங்காட்சியக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இதன்போது அல்லைப்பிட்டிப் பகுதியில் 92.4 சதுர மீற்றர் பரப்பளவிலான இடத்தில் அகழ்வாய்வை மேற்கொண்ட போது, 650 வரையான மட்பாண்டத் துண்டுகளைக் கண்டெடுத்துள்ளதாகவும்,  அவற்றில் 600 இற்கு மேற்பட்டவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...