தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ..

வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது என்ற விடயத்தில் தாம்  உறுதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு   கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற விடயத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடளுமன்ற உறுப்பினர்களும் தெளிவோடு இருப்பதாகவும்,

ஒன்பது மாகாணங்களை, எட்டு மாகாணங்களாக குறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில்,  இன்றைய நிதி ஒதுக்கீட்டு முறைகள், வேலை வாய்ப்புக்கள், அபிவிருத்தி விடயங்கள் அத்தனையும் பிரதேச ரீதியாக, தொகுதி ரீதியாக, மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

இந்நிலையில் இரண்டு மாகாணங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை, வடகிழக்கு என இணைந்து குறைத்து கொள்வதற்கோ அல்லது எதிர்காலத்தில் எமது சமூகத்தின் உரிமைகளை விடுட்டு கொடுப்பதற்கோ தாங்கள் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டக்களப்பில் 27% ,திருகோணமலையில் 44% , அம்பாறையில் 43% இருக்கின்ற முஸ்லிம் சமுகம், வடகிழக்காக மாறி ஒரே இரவில் 16%ஆக மாறுவதற்கு தயாரில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில்   த ங்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரோடு தாம்  பேசியுள்ளதாகவும் அவர்   இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...