தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் காரணமாக 3080 சிறுவர்கள் பாதிப்பு..

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் காரணமாக 3080 சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 136 கிராமங்களில் 58 கிராமங்கள் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார்  தெரிவித்துள்ளார்.

இதுவரை 6001 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்தி 78 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 3080 சிறுவர்கள் உள்ளடங்குவதாக சிறுவர்பாதுகாப்பு பிரிவினரின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை   வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்ந்தும் 28 தற்காலிக இடைத்தங்கள் மூகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...