தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேர்தல் நேரத்தில் மட்டுமே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை வரும் – ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் மட்டுமே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை வரும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட பாபநாசத்தில் நேற்று சனிக்கிழமை 22/03/2014 அன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், பிற சமயங்களில் மக்களை சந்திக்க ஜெயலலிதா முன்வருவாரா? என்றும் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக தரையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.ஸ்டாலின்

பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றவும் அதிமுக அரசுதான் முட்டுக்கட்டையாக இருந்தது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments
Loading...