Designed by Iniyas LTD
தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 300 கோடி சேதம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த சேதம் சுமார் 300 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்களிற்கான மாதாந்த கலந்துரைநாடல் நேற்றைய தினம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போதே வெள்ள அனர்த்தத்தின் சேதத்தை நிறைவு செய்ய 300 கோடி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய பதிவு
இதேவேளை வெள்ள பாதிப்பு கோரிக்கையினை முன்வைத்தால் உடனடியாக அதனை விடுவிக்க தயாராக இருப்பதாக அறிவித்த ரணில் அரசு தற்போது அவற்றினை வரவு செலவுத்திட்டத்தின்(பாதீட்டின்) மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என விளக்கமளித்துள்ளது.
ஏற்கனவே கொழும்பு அரசியல் குழப்பங்களால் தற்காலிக வரவு செலவு திட்டத்தையே அரசு சமர்ப்பிக்கவுள்ளது.
இந்நிலையில் தற்போதைய நிலையில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் கூட நான்கு மாதங்களின் பின்னரே கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் உடனடித் தேவைகளிற்காக சமைத்த உணவும் இரு வாரங்களிற்கான உலர்உணவு நிவாரணங்களிற்கான நிதியுமே அரசினால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.