Designed by Iniyas LTD
யாழ் சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் சி.சி.டீவி கேமராவின் இணைப்புக்களை துண்டித்து கொள்ளை…
யாழ் சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை கடையை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது
குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின் மேற்கூரையை பிரித்து சி.சி.டீவி கேமராவின் இணைப்புக்களை துண்டித்து விட்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதன்போது, சுமார் ஏழு லட்சம் ரூபா பணம் மற்றும் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என சுமார் பத்து லட்சம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
இதேவேளை கொள்ளை இடம்பெற்ற போது வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் கடையின் பின்புறம் உறக்கத்தில் இருந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.