தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு…

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக  தெரியவருகின்றது.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பயிலும் சாதாரணதர மாணவர்களான 16 வயதுடைய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தைப்பொங்கலை  தினத்தை முன்னிட்டு தமது  நண்பர்களுடன் குறித்த மாணவர்கள் ஈரப்பெரியகுளத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்கள்   உணவருந்திய பின்னர் கை கழுவுவதற்காக ஒருவர் குளத்தின் நீர்ப்பகுதிக்கு சென்றபோது தவறுதலாக கீழே வீழ்ததாகவும் அவரை காப்பாற்றும் நோக்கோடு சென்ற மற்றைய நண்பனும் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பொலிஸாரின்  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும்  உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தைபொங்கல் நாளில் குறித்த மாணவர்கள் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...