Designed by Iniyas LTD
இந்தியா – நியுஸிலாந்து ஒருநாள் தொடர் நாளை துவக்கம்…!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை நடைபெற உள்ளது .
இந்திய நேரப்படி நாளை காலை ஏழு முப்பது மணிக்கு இந்த போட்டிகள் துவங்கும் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நியூசிலாந்தில் நடக்கும் தொடர்கள் இந்தியாவில் ஒளிபரப்பப்படும்.
இந்திய அணி கடைசியாக கடந்த 2014-15-இல் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. இதில் 4-0 என ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா.
இரு அணிகளும் இதுவரை 98 ஒரு நாள் ஆட்டங்கள் ஆடியுள்ளன. இதில் இந்தியா 49-இலும், நியூஸி. 43-இலும் வென்றன. 1 டையில் முடிந்தது. 5 ஆட்டங்கள் எந்த முடிவும் தெரியவில்லை.
இரு அணிகளும் கடந்த 1976 முதல் ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி வருகின்றன. 12 ஒரு நாள் தொடர்களில் இந்தியா 6 முறையும், நியூஸி. 4 முறையும் கைப்பற்றியுள்ளன.
iஇதேவேளை நியூஸிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
