தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரவு நேரத்திலும், துறைமுகம் செயற்படக் கூடிய வகையில் திருகோணமலையில் புதிய ராடர் கருவி….

திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்கள், வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படத்தக்க வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இத்தகவலை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் திருகோணமலை பிரதேசத்தை ஒரு ஏற்றுமதி வாய்ப்புள்ள கேந்திரமாக  அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகவும்,  எனவே, சரக்கு கப்பல்களைக் கையாளுவதற்கான மேலும் வசதிகளை அங்கு  ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக, இரவு நேரத்திலும், துறைமுகம் செயற்படக் கூடிய வகையில் புதிய ராடர் கருவி பொருத்தப்படவுள்ளதோடு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின் அனைத்துலக கூட்டுத்தாபனத்தின் 1 பில்லியன்  உதவியுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , காலி துறைமுகமும், இரவு நேரத்தில் செயற்படும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...