தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே போர்க்குற்றவாளி ஆளுனராகத் தெரிவு

வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே போர்க்குற்றவாளியான ஒருவர் ஆளுனராகத் தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.mm avai

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஆளுனரினால் தான் வடக்கில் இராணுவ ஆதிக்கம் பிரயோகிக்கப்படுகின்றன. ஆளுனரின் பின்னணியில் தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடமாகாண ஆளுனரை நியமிக்கும் போது மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.மீனவ சமூகம், விவசாயிகள், பொதுமக்கள் சொந்த இடங்கள் இல்லாமல் முகாம்களில் தங்கியிருக்கும் நிலையில், வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நிலைநாட்டுவதற்காக தான் போர்க்குற்றவாளியான ஒருவர் ஆளுனராகத் தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தேவைக்காகவும், இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்ற மக்கள் சொந்த கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் வடக்கில் சிவில் நிர்வாகம் கொண்டு வரப்பட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Loading...