தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களோ போராட்டத்தில்… கண்டுகொள்ளாமல் கூட்டமைப்பு கேளிக்கையில்…

தாயகத்தில் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் அதனை ஒரு கண்டுகொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழில் நடைபெறும் சமாதான தேசிய நல்லிணக்க புத்தாண்டில் கலந்து கொண்டு உள்ளது


யாழ் துரையப்பா மைதானத்தில் குறித்த நிகழ்வை தேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ்। மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ், சிங்கள மக்களின் பண்பாடுகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதோடு , பண்பாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏ।எச்।எம்।பௌசி, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணை தூதுவர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...