தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீதியின் அருகே படுத்திருந்தவரின் கால்களின் மீது ஏறிய ரிப்பர் வாகனம் …

வீதியின் அருகே படுத்திருந்தவரின் கால்களின் மீது ரிப்பர் வாகனம் ஏறியதால் அவர் படுகாயமடைந்த நிலையில். கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மாங்குளம் ஏ9 வீதியில் பனிக்கன் குளம் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரிப்பர் வாகனம் இவ்வாறு படுத்திருந்தவரின் கால்களின் மீது ஏறிச் சென்றது.


சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபரே இந்தச் சம்பவத்தில் கால்கள் சிதைவடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படுள்ளார்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் காயமடைந்த நபர் மது போதையில் படுத்திருந்தாரா என்பது மருத்து ஆய்வுகளின் பின்னரே தெரியவரும் என கூறியுள்ளனர்.

Comments
Loading...