Designed by Iniyas LTD
யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகம் மாணவர் விடுதி மற்றும் கற்கை நிலையங்கள் விசேட அதிரடிப்படையினரால் சோதனை..

கொழும்பு,நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் அண்மையில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து நாடு முழுவதும் முப்படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் வவுனியா பம்பைமடுவிலுள்ள யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகம் மற்றும் மாணவர் விடுதி மற்றும் கற்கை நிலையங்கள் போன்றவை இன்றைய தினம்(03) விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரினால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை-07.30 மணி முதல் முற்பகல்-11 மணி வரை குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.