தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தோனி போல் ரன் அவுட் செய்த அடில் ரஷித்…

திரும்பி நின்றபடி ரன் அவுட் செய்து இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் லீட்சில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 27ஆவது ஓவரை அடில் ரஷித் வீசினார்.

பேட்டிங் முனையில் சர்பராஸ் அகமதுவும், பவுலிங் முனையில் பாபர் ஆசமும் இருந்தனர்.

சர்பராஸ் அகமது பந்தை அடித்து விட்டு அங்கேயே நின்று விட, பேட்டிங் முனையை நோக்கி பாபர் ஆசம் ஓடினார்.

சர்பராஸ் அகமது ஓடாததால், பாபர் ஆசம் மீண்டும் எல்லைக் கோட்டுக்கு திரும்ப முயன்றார். ஆனால் கையில் பந்து கிடைத்த மறு கணமே, ஸ்டம்புகளை பார்க்காமல் அடில் ரஷித் ரன் அவுட் செய்து அசத்தியுள்ளார்.

Comments
Loading...