Designed by Iniyas LTD
கல்வியியற் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை நாளை…
கல்வியியற் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை நாளை புதன்கிழமை(21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
19 கல்வியியற் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது எதிர்வரும்-31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.