தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை நாயாற்றில் படையினர் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்

சில நாட்களாக பெருந்தொகையில் படையினர் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தொடங்கியுள்ளதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.

நாயாறு பாலத்துடன் அண்டிய பிரதேசத்தில் ஒரு மேலதிக படை முகாம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும் போதும் மேலதிக படை முகாம் அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.download

மேற்படி காணிகள் ஏற்கனவே இப்பிரதேசத்தில் வசித்த பெருமளவு தமிழ்மக்களுக்கும் ஒரு சில சிங்கள குடும்பங்களுக்கும் ஆட்சிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட காணிகளாகும் என தற்போது தான் அறிந்துகொண்டதாக வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

இதுவரை காலமும் படையினர் எமது மக்களை போகவிடாது தடுத்துவிட்டு இன்று தமது ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதை எவ்விதத்திலும் அனுமதிக்கமுடியாது.மக்களை படையினர் ஆக்கிரமிப்பிற்கு ஊக்குவிக்கும் இந்த அரசுடன் எப்படி இனநல்லிணக்கத்தை பற்றி பேசுவது?

எமது முதலமைச்சர் அவர்கள் வட மாகாண காணி அமைச்சராக உள்ள போது அரசியல் யாப்பின் படி அவரின் ஊடக மத்திய அரசுக்கு செய்யப்படும் காணிகள் மட்டுமே படையினர் தனது தேவைக்கு பாவிக்கமுடியும். அப்படியிருக்க அடாவடித்தனமாக காணி அபகரிப்பில் ஈடுபடும் படையினரை கண்டிக்கின்றேன் என்றார்.

மேலும் இது விடயமாக பிரதேசசெயலர், கறைதுறைப்பற்று அவருடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய போது சுமூகமான முறையில் மேற்படி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

இருப்பினும் அவரது அனுமதியை கூட பெறாது அடாவடியால் ஈடுபட்டுள்ள படையினரை கட்டுப்படுத்தும் அதிகாரம் கேள்விக்குறியே? தொடரும் இந்த நில ஆக்கிரமிப்புக்கள் வடக்கில் படை ஆட்சிக்கான ஒரு சான்றாகும் என்றார்.

Comments
Loading...