Designed by Iniyas LTD
இந்தியா – பாலஸ்தீன கால்பந்தணி நட்புரீதியிலான போட்டிகளில் விளையாட உள்ளது
இந்திய கால்பந்து அணி அக்டோபர் மாதம் பாலஸ்தீன அணியுடன் இரண்டு சர்வதேச நட்புரீதியிலான போட்டிகளில் விளையாட உள்ளது. 
சமீபத்தில் ஏஎப்சி சேலஞ்ச் கோப்பையை வென்ற பாலஸ்தீன அணியுடன் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்திய அணி விளையாடும் என்று இந்திய கால்பந்து சம்மேளனம் உறுதி செய்துள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் இடம் பற்றி செய்தி வெளியிடப்படவில்லை.
சர்வதேச கால்பந்து தரவரிசையில் 151-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 85-வது இடத்தில் இருக்கும் பாலஸ்தீன அணியுடன் விளையாடுவது சவால் நிறைந்ததாக இருக்கும்.
கடந்த ஆண்டு கொச்சியில் நடந்த நட்புரீதியிலான தொடரில் இந்திய அணியை பாலஸ்தீன அணி 4-2 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.