தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வட மாகாணத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் குறித்து கவனம் தேவை : டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில இன்று நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில், இலங்கையில் சுமார் 685 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற நிலையில், இவற்றில் அதிகளவிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் வடக்கு மாகாணத்திற்கான ரயில் பாதையிலேயே அமையப் பெற்றிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையில், வடக்கு மாகாணம் நோக்கியதான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று வரையில் தொடர்ந்தும் மிக அதிகளவிலான விபத்துகள் ஏற்பட்டு, பல மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைக் காப்பாளர்களாக வடக்கு மாகாணத்தில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் உள்வாங்கப்பட்டுள்ளவர்கள் ஊதியப் பிரச்சினை, தொழில்சார் பிரச்சினை மற்றும் அடிப்படை வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் பலரும் இன்று அக்கடமைகளைவிட்டு விலக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்துள்ளார்.


Comments
Loading...