Designed by Iniyas LTD
கனடா உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு
இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் திரு டேவிட் மெக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
