Designed by Iniyas LTD
மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது மதுரை நில அபகரிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 40 செண்ட் நிலத்தை போலி பத்திரம் மூலம் தயா பொறியியல் கல்லூரி பெயரில் மாற்றம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி முத்துமாணிக்கம் என்பவர் மதுரை புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.