Designed by Iniyas LTD
ஐரோப்பாவின் சிறந்த வீரருக்கான விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார்
ஐரோப்பாவின் சிறந்த வீரருக்கான விருதை போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருது 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.
இதில் 2013 – 14 ஆம் ஆண்டுக்கான காலத்தில் சிறந்த வீரருக்கான விருதுத் தெரிவில் ஐரோப்பாவின் மனுவேல் நியூர், அர்ஜன் ரொப்பன் ஆகியோர் ரொனால்டோவுடன் தெரிவில் இருந்தனர். ஆனால் அதிக வாக்குகளைப் பெற்ற ரொனால்டோவுக்கு சிறந்த வீரரருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதானது இவருக்கு முதல் முறையாக கிடைக்கிறது.
2010-11 ஆம் ஆண்டு மெஸ்ஸி, 2011-12 ஆம் ஆண்டு ஆண்ட்ரெஷ், 2012-13 ஆம் ஆண்டு பிராங்க் ஆகியோர்களுக்கு கிடைத்தது. தற்போது ரொனால்டோவுக்கு கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த பட்டியலில் தெரிவாகி இருந்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி இந்த பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.