தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா – இங்கிலாந்து மோதும் 4வது ஒருநாள் போட்டி

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்கள் குவித்துள்ளது.

india_chase_002இந்தியா – இங்கிலாந்து மோதும் 4வது ஒருநாள் போட்டி, பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை தெரிவு செய்தது.இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் குக் மற்றும் அலெக்ஸ் ஹால்ஸ் களமிறங்கினர்.

ஆனால் அவர் நிலைத்து நிற்காமல் புவனேஷ்வர் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். குக் 9 ஓட்டங்களையும், அலெக்ஸ் 6 ஓட்டங்களையும் மட்டும் எடுத்தனர்.பின்னர் இறங்கிய கேரி பேலன்ஸ் 7 ஓட்டங்களில் வெளியேற, ரூட் நிலைத்து நின்று 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சுரேஷ் ரெய்னா பந்து வீச்சில் குல்கரனியிடம் கேட்ச் கொடுத்தார்.

அதேபோல் இயோன் மோர்கன் 32 ஓட்டங்கள் குவித்த நிலையில் நடையை கட்டினார். பின்னர் ஜோஸ் பட்லர் (11 ஓட்டங்கள்), கிறிஸ் வோக்ஸ்(10 ஓட்டங்கள்), ஸ்டீவன் ஃபின்(2 ஓட்டங்கள்), ஹாரி கர்னி(3 ஓட்டங்கள்) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினர். பொறுமையாக விளையாடிய மொயீன் அலி 67 ஓட்டங்கள் குவித்து அஸ்வின் பந்து வீச்சில் போல்ட் ஆனார். ஆண்டர்சன் 1 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களில் சுருண்டது. இந்தியா தரப்பில், முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், ரவிசந்திரன் அஸ்வின், சுரேஷ் ரெய்னா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 207 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடி வருகிறது.

Comments
Loading...