Designed by Iniyas LTD
ஈராக்கின் போர் விமானங்கள் அதிரடி தாக்குதல்கள்
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக அபுபக்கர் அல்-பாக்தாதி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராக்கின் பல்வேறு முக்கிய நகரங்களை இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நகர்களை மீட்பதற்காக ஈராக் மற்றும் குர்திஷ் படைகள் கடுமையாக போரிட்டு வருகின்றன. இந்த அரசு படைகளுக்கு ஆதரவாக தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்காவும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் நினிவே மாகாணத்தின் மொசூல் மற்றும் தல் அபார் பகுதிகளுக்கு இடையே ஈராக்கின் போர் விமானங்கள் அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டன. இதில் அபுபக்கர் அல்-பாக்தாதியின் நெருங்கிய கூட்டாளியான அபு ஹாஜிர் அல்-சூரி கொல்லப்பட்டார். இந்த தகவலை ஈராக்கின் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.