Designed by Iniyas LTD
வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த வன்னி மக்களுக்கு மழை
வவுனியா உட்பட வன்னி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்கு பின்னர் தற்போது மழை பெய்துவருகிறது. வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த வன்னி மக்களுக்கு மழை பெய்ய ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்திற்கு பின்னர் வன்னி மாவட்டத்திற்கு குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் இருக்கும் 80 வீதமான குளங்கள் வற்றி போயின.
குளங்கள் வற்றியதால், வன்னி மக்கள் குடிநீர் மற்றும் பயிர் செய்கையில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது