Designed by Iniyas LTD
ஆசிரியர் சங்கம் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது
சர்வதேச ஆசிரியர் தினமான நாளைய தினம், இலங்கை ஆசிரியர்கள் சங்கம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இடமாற்றக் கொள்கையின் முறையான அமுலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.