தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியா – பாலஸ்தீனம் அணிகளுக்கு இடையிலான நட்பு கால்பந்து போட்டி

இந்தியா – பாலஸ்தீனம் அணிகளுக்கு இடையிலான நட்பு கால்பந்து போட்டி இன்று மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் இரு அணிகளும் கடந்தாண்டு பெப்ரவரி மாதத்தில் மோதின. இதில் 2-4 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.India-P

இந்தமுறையும் தரவரிசையில் 158-வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு, தரவரிசையில் 102-வது இடத்தில் உள்ள பாலஸ்தீனம் கடும் சவால் அளிக்கும். இரு அணிகளுக்குமிடையிலான முன்னைய போட்டி பற்றி இந்திய பயிற்சியாளர் விம் கோவர்மன்ஸ் கருத்து வெளியிட்டார்.

 “பாலஸ்தீனம் வலுவான அணி. அதேசமயத்தில், எங்களை மேம்படுத்திக் கொள்ள வலுவான அணியை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். இருப்பினும், இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டு விட்டதால், ஒரே ஆட்டத்தில் தங்களை நிரூபிப்பதில் யாருக்குமே சிரமம் இருக்கும்’ என்றார்.

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில், “சிலிகுரியில் விளையாடப் போகிறோம் என்றவுடனேயே, கடந்தமுறை உள்ளூர் ரசிகர்கள் அளித்த ஆதரவுதான் நினைவுக்கு வந்தது. இந்தமுறையும் ரசிகர்களை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

Comments
Loading...