தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை எக்கட்சியை ஆதரிப்பது – முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை எக்கட்சியை ஆதரிப்பது என்பது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் எதற்கும் அஞ்சி முடிவெடுக்காது. கட்சி கூட்டாகவே முடிவெடுப்பதுடன் அது சமூக நலன் சார்ந்த முடிவாகவே அமையும் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.Rauff Hakeem1

கல்முனை மாநகர சபையின் புதிய பிரதி மேயராக நியமனம் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல். அப்துல் மஜீதின் பதவிப்பிரமாண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதிமேயராக அப்துல் மஜீத் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு கல்முனை மாநகர சபை மேயர் அலுவலகத்தில் மாநகர மேயர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது

Comments
Loading...