Designed by Iniyas LTD
விராட் கோலியி்ன் 3டி அனிமேஷன் படம்
அண்மையில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. அதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தர வரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறினார். 
இந்நிலையில், இந்த சாதனையை கொண்டாடும் வகையில் விராட் கோலியி்ன் 3டி அனிமேஷன் படம், இணையதளம் மற்றும் லோகோ ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 3டி அனிமேஷன் வெளியீ்ட்டு விழாவில் கலந்து கொண்ட விராட் கோலி கூறுகையில், ‘எனது சூப்பர் ஹீரோ அவதாரம் ஸ்பைடர்மேன் மற்றும் சூப்பர்மேன் போல எதிரிகளுடன் சண்டையிடும். நான் இதை செய்ய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. 3டி அனிமேஷன் தொடர்கள் மிகவும் ஆச்சர்யமானவை. எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குழந்தைகளை நிச்சயம் ஈர்க்கும். எனது 3டி அவதாரம் விரைவில் பிரபலமாகும் என நினைக்கிறேன்.’ என்றார்.
சூப்பர் ஹீரோ கேரக்டரை வெளியிடும் முதல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.