தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரகசிய சாட்சியமளித்தவர்கள் கண்காணிப்பு கமரா மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளார்கள்

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் இரகசிய சாட்சியமளித்தவர்கள் கண்காணிப்பு கமரா மூலம் கண்காணிக்கப்பட்டார்களா என சாட்சியமளித்தவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த 14,15 ஆம் திகதிகளில் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் செட்டிகுளம் பிரதேச செயலகத்திலும் 16,17 ஆம் திகதிகளில் வவுனியா பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றன.CCTV

வவுனியா பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடைபெற்ற இடத்தில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டிருந்தது. அங்கு சாட்சியமளித்தவர்களையும் ஆணைக்குழுவினரையும் பார்க்கக் கூடிய வகையிலேயே அது காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி சாட்சியமளித்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவருடைய மனைவியும் மற்றும் ஒரு பெண்ணும் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இரகசியமாக சாட்சியமளித்தனர். அவர்கள் சில ஆவணங்களையும் ஆணைக்குழுவினரிடம் கையளித்தனர்.

இந்த இரகசிய சாட்சியமளிப்பின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவினர் தவிர்ந்த எவரும் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அந்த இரகசிய சாட்சியமளிப்புக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா மூலம் கண்காணிக்கப்பட்டதா? எனவும் அதனை யார் கண்காணித்தார்கள் எனவும் சாட்சியமளிக்க வந்த மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Comments
Loading...