Designed by Iniyas LTD
தேர்தல் பிரச்சாரத்தில் மேடியை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடி தான் வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்காதது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. டெல்லியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கோடிக்கணக்கான கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருவேன். அந்த பணத்தை வைத்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார். அது என்ன ஆனது?.
ஒபாமா வருகையின்போது மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள சூட் அணிகிறார். அணுசக்தி உலையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அமெரிக்க நிறுவனம் எந்த உதவித்தொகையும் தராது. அதற்கு பதிலாக இந்திய அரசு தான் உதவித் தொகை தரவேண்டும். நீங்கள் வேலைவாய்ப்பு பற்றி கேட்டாலோ, பணவீக்கம் குறைந்துவிட்டதா என்று கேட்டாலோ, நரேந்திர மோடி உங்களிடம் ஒரு துடைப்பத்தை கொடுத்து இந்தியாவை சுத்தப்படுத்துங்கள் என்று கூறிவிட்டு அமெரிக்காவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் செல்கிறார்.
கச்சா எண்ணெய் விலை ஜன்லோக்பால் கொண்டுவந்தால் ஊழல் ஒழிந்துவிடும் என்றனர். ஜன்லோக்பால் வந்துவிட்டது, ஊழல் ஒழிந்துவிட்டதா? மின் கட்டணம், குடிநீர் கட்டணத்தை குறைப்போம் என்றார்கள். அதனை அவர்கள் செய்தார்களா? நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 140 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால் இப்போது 40 முதல் 45 டாலராக இருக்கிறது. இந்த பலன்கள் மக்களை சென்றடைந்ததா? தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பா.ஜ.க. வன்முறையை தூண்டிவிடும். அரியானா, உத்தரபிரதேசம், ஜம்மு–காஷ்மீர் ஏன் டெல்லியில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்முறைகள் எங்கு நடந்தாலும் அங்கு காங்கிரஸ் உடனடியாக வரும், கெஜ்ரிவால் அல்ல.
தொழில் அதிபர்களுக்கே தகவல் அறியும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் ஆகியவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனைகள். ஆனால் கடந்த 8 மாதங்களில் பா.ஜ.க. அரசு எதையும் உறுதியாக செய்யவில்லை. இளைஞர்கள் சிறந்த எதிர்காலம், நல்ல வேலை கிடைக்க கனவு காண்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. மூன்று, நான்கு தொழில் அதிபர்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலேயே இருக்கிறது. இதைத் தான் மோடி செய்திருக்கிறார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் ஒரு தொழில் அதிபருக்கு கடன் கிடைக்கிறது. ரஷிய அதிபர் இந்தியா வந்தால், மற்றொரு பெரிய
நிறுவனம் பலன் அடைகிறது.
கெஜ்ரிவால் மீது தாக்குதல் அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்தவர்கள் (அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி) இப்போது ஆம் ஆத்மியிலும், பா.ஜ.க.விலும் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரசை தாக்குவது பற்றி திட்டமிட்டு வருகிறார்கள். ஏழைகளை புறக்கணிக்க ஒரே வழி காங்கிரசை பலவீனப்படுத்துவது தான் என்று நமது எதிரணியினர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி ஓட்டுகளை பிரிப்பதன் மூலம் காங்கிரசை பலவீனப்படுத்தவே வந்திருக்கிறது. அதனால் தான் ஆம் ஆத்மியில் இருந்து யார் விலகினாலும் அவர்கள் பா.ஜ.க.வில் சேருகிறார்கள், கெஜ்ரிவால் முன்பு தினமும் ஊழல், கற்பழிப்பு என ஏதாவது ஒரு காரணத்துக்காக போராட்டம் நடத்தினார். இப்போது பா.ஜனதா ஆட்சியில் 30 சதவீதம் கற்பழிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் எந்த போராட்டமும் இல்லை, கெஜ்ரிவால் பா.ஜனதாவை எதிர்த்து எந்த போராட்டமும் நடத்தவில்லை. ஏனென்றால் அவரது விருப்பம் காங்கிரசை பலவீனப்படுத்துவது தான். ஏழை மக்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை அவர் இதில் வெற்றி பெறமுடியாது.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.