தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒருநாள் அணித்தலைவர் பதவியை ஸ்டீவன் சுமித்திடம் கொடுக்க வேண்டும் – ரிக்கி பொண்டிங்

உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பின்னர் ஒருநாள் அணித்தலைவர் பதவியை ஸ்டீவன் சுமித்திடம் கொடுக்க வேண்டும் என்று கிளார்க்கு ரிக்கி பொண்டிங் அறிவுரை கூறியுள்ளார்.pinting_R

அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் காயத்தால் அவதிப்படும் நிலையில், அவர் உலகக்கிண்ண போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியை வழிநடத்த சரியான நபராக இருப்பதாக முன்னாள் அணித்தலைவர் பொண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தினாலும் உலகக்கிண்ணப் போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டிக்கான அணித்தலைவர் பதவியை ஸ்டீவன் சுமித்திடம் மைக்கேல் கிளார்க் வழங்க வேண்டும். இதுவே சரியான தருணமாகும்.

அதன் பிறகு கிளார்க் டெஸ்ட் அணித்தலைவராக மட்டும் நீடிக்க வேண்டும். அவர் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...