தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.as

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில், இன்று நடக்கும் உலகக்கிண்ண தொடருக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் முகமது நபி, களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

அவுஸ்திரேலியா இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோல்வியடைந்துள்ளது. வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

அதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா உள்ளது. இப்போட்டியில் வென்றால்தான் அவுஸ்திரேலியாவால் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதேநேரம், கடந்த போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. எனவே இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Comments
Loading...