தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயக்குமாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு

மனித உரிமை செயற்பாட்டாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.Jeyakumari

விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் ஜெயக்குமாரி மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.

ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வேண்டும் என அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். எனினும் சட்டமா அதிபரின் எழுத்து மூலமான ஆலோசனை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனை என்ன என்பதை நீதிமன்றத்திற்கு அறியத் தருமாறு நீதவான், பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் ஜெயக்குாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Comments
Loading...