Designed by Iniyas LTD
இந்திய, இலங்கை படையினரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவும் இதயங்கள் அமைப்பு உதவி!
இந்திய அமைதிப் படையினரால் தாக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வரும் நிலையினில் மகளும் இலங்கை இராணுவ நடவடிக்கை காரணமாக படுத்த படுக்கையான பரிதாபம் தமிழ் குடும்பங்களிற்கே நிகழும் அதிசயக்கதைகள் ஆகும்.

வவுனியா பூந்தோட்டம் பகுதியினில் வசித்து வரும் தங்கவேல் (வயது 65) 1987 ம் ஆண்டில் இந்திய இராணுவ தாக்குதலில் நடமாட முடியாதவாறாக படுத்த படுக்கையாக்கியிருந்தது.
இந்நிலையினில் அவரது மகளான மாதங்கியும் (வயது 21) இறுதி யுத்தகாலப பகுதியில் மாங்குளத்தினில் விபத்திற்குள்ளாகி படுத்த படுக்கையாகியுள்ளார்.
எந்தவொரு வருமானமோ உதவியோ அற்ற அந்தக் குடும்பத்தின் பரிதாபத்தை உணர்ந்து ஜெர்மனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளது உதவும் இதயங்கள் அமைப்பின் ஊடாக திரு.சின்னத்தம்பி மகேந்திரம் அவர்கள் முதல் கட்ட உதவியினை வழங்கியுள்ளார்.
உதவும்இதயங்கள்அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் ச.சஜீவன் நேரில் சென்று உதவிகளை வழங்கியிருந்தார்.