Designed by Iniyas LTD
ஐபிஎல் கிரிக்கெட்: கோப்பையை வென்றது மும்பை இண்டியன்ஸ் அணி!
கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது மும்பை அணி. பிறகு, 203 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே மந்தமாக விளையாடியது. இறுதியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 2-வது முறையாக சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013-ம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்த வருடமும் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 8 தொடரில் 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி 4 முறை பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது. பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் இந்த தொகையை வழங்க மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுக்கொண்டார். இதேபோல் சென்னை அணி கேப்டன் தோனி ரூ.10 கோடியை பெற்றுக்கொண்டார்.