Designed by Iniyas LTD
மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை அரசு முயற்சி எடுக்கும்:மஹிஷினி கொலோன்
இருநாட்டுக்கும் இடையிலான மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடிப்பது குறித்து இருநாட்டு மீனவர் நலனையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஹிஷினி கொலோன் கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்பகுதியில் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை தமிழக மீனவர்கள் 65 நாட்கள் மீன்பிடிக்க இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருந்தது. இதற்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்தா அமரவீரா மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மஹிஷினி கொலோன் இவ்வாறு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.