Designed by Iniyas LTD
இந்தியா: பஞ்சாப் லூதியானாவில் அமோனியா வாயு கசிவு:6 பேர் உயிரிழப்பு
இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டேங்கர் லாரியில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
தோராஹா பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மேம்பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்தபோது, நகர முடியாமல் நின்றது. இதனால் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு , அதை சுவாசித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் அருகே உள்ள கிராமங்களில் சுமார் 100 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தோராஹா கிராமம் முழுவதும் அமோனியா வாயு பரவி வருவதால் கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அப்பகுதிக்கு வந்து மக்களை வெளியேற்றி வருகிறது. வாயுக்கசிவால் பல்வேறு விலங்குகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.