தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அகதிகளை குடியமர்த்துவதில் ஐரோப்பிய யூனியன் விதியை தற்போதைக்கு பின்பற்ற முடியாது – ஹங்கேரி

hunry-migrantஐரோப்பிய யூனியன் அகதிகளை குடியமர்த்தும் விவகாரத்தில் அறிவித்துள்ள முக்கிய விதியை தற்போதைக்கு செயல்படுத்த முடியாது என்று ஹங்கேரி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அதிகம் பேர் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் புதியவர்களை ஏற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக ஹங்கேரியில் குடியேறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஹங்கேரி தனது நிலையை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய கமிஷன் கூறியுள்ளது.

 மேலும் அடைக்கலம் கோரி வருபவர்கள் முதலில் எந்த நாட்டிற்குள் நுழைகிறார்களோ அந்த நாடே அவர்கள் கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்திருந்தது. ஒரு வேளை அடைக்கலம் கோருவோர் ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வேறு நாட்டிற்கு இடம் பெயர்ந்தால், அவர்களை திருப்பி முதலில் எந்த நாட்டிற்குள் நுழைந்தார்களோ அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சட்ட விரோதமாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு செர்பியாவுடனான எல்லைப்பகுதியில் 175 கிலோமீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவரைக் கட்டப்போவதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.

Comments
Loading...