Designed by Iniyas LTD
சன் குழுமம் 742 கோடி ரூபாய் சொத்துகளை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
ஏர்செல் – மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய 742 கோடி ரூபாய் சொத்துகளை விடுவிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் சன் குழுமத்தின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சன் குழுமத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகிய முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான கபில் சிபில், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க கோரும் மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.
இதனையடுத்து, மனுவை ஏற்றுக் கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஏர்செல் – மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில், 742 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அண்மையில் அமலாக்கத்துறை முடக்கியது. இதை எதிர்த்து சன் குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், சொத்துகளை விடுவிக்குமாறு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.