தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய அரசாங்கத்துக்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்

இந்த தேர்தலில் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வருகின்ற அரசாங்கம் உண்மையிலே இழுபறி அரசாங்கமாக வர இருக்கிறது.selvam_adaiklanathan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை கைப்பற்றுகின்ற போது இந்த அரசாங்கத்தை நிபந்தனையின் அடிப்படையிலே செயலாற்றுவதற்கான வழியை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான சூழல், சிறையில் உள்ள இளைஞர்- யுவதிகளின் விடுதலையும், காணாமல் போனவர்களின் பிரச்சினை, சொந்த நிலங்களில் எமது மக்கள் வாழ்வதற்கான உரித்தை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பினையும், எங்களுடைய கடலையும் விவசாய நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள், இராணுவத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் போன்ற முக்கிய விடயங்களை உடனடியாக செய்கின்ற போது, புதிய அரசாங்கத்துக்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு கொடுப்பது பற்றி யோசிக்க முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Loading...