தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிகரிக்கும் அகதிகள்: அவசரமாக கூடுகிறது ஐரோப்பிய யூனியன்

refuges-310ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பிரச்சனையை எதிர்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கும் பொருட்டு வரும் செப்டம்பர் 14ஆம் தேதி அவசரக்கூட்டம் நடைபெறும் என்று ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

இதில் 28 உறுப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் விவகாரத்தில் உறுப்பு நாடுகளுக்குள் ஒத்துழைப்பு, ஆள்கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

Comments
Loading...