தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தனித்து வாழவே எமது மக்கள் விரும்புகின்றனர்: வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

MY VICKI_CIஎமது மக்கள் கொடிகளாகப் பெரும்பான்மையினருடன் இணைந்து வாழ்வதை விரும்பவில்லை. பெரும்பான்மையினர்கள் தனிமரங்களாக வாழ்வதைப் போன்று தாமும் தனி மரங்களாக வாழ்வதையே எமது மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக, வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்த நாட்டில் பலர் மத்தி யிலும் இருந்து வந்திருக்கின்றது. வடக்கு – கிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்கவில்லை. ஏற்கவும் முடி யாது. காரணம் சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ் பேசும் வட – கிழக்கு மாகாண மக்கள் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள், வருகின்றார்கள். இருமரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எமது மக்கள் விரும்புகின்றனர். பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை. இவ்வாறு வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

உணவுப் பாதுகாப்பும் நிலையான விவசாயமும், தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனாவினால் இரணைமடுவில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்துகையிலேயே, வடக்கு முதலமைச்சர் இ்வ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது மைத்திரி ஆட்சி உதிக்க மனமுவந்து முன்வந்தவர்கள் எங்கள் மக்கள். முன்னைய ஜனாதிபதி தனது தோல்வி இந்த நாட்டின் சிறுபான்மையினரால் ஏற்படுத்தப்பட்டதென்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். எனவே மைத்திரி ஆட்சியில் நல்லிணக்கம் கொண்ட நிலையான நாட்டை உருவாக்க உத்தேசித்திருக்கும் எமது ஜனாதிபதியும் அவரின் அமைச்சர்களும், அலுவலர்களும், ஆதரவாளர்களும் எம்மால் வரவேற்கப்பட வேண்டியவர்கள்.

உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கவும், சுயநிறைவை ஏற்படுத்தவும், சேதன உரத்தை வெகுவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் இன்னோரன்ன காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை வரவேற்கின்றோம். பல வருட காலமாகப் பலரால் மறக்கப்பட்டிருந்த அல்லது மறைக்கப்பட்டிருந்த எமது மக்கள் மத்தியில் இருந்து தேசிய ரீதியான ஒரு நிகழ்வை இன்று முடுக்கிவிடுவது, வருங்காலத்தில் பலமான தேசிய ஒருமைப்பாட்டையும் நிலையான நிலைமைப்பாட்டையும் உண்டு பண்ண உதவும் என்று எதிர்பார்க்கின்றோம். வளைந்து கொடுக்க விரும்பவில்லை. பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்த நாட்டில் பலர் மத்தியிலும் இருந்து வந்திருக்கின்றது.

வட – கிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்கவில்லை. ஏற்கவும் முடியாது. காரணம் சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ்ப் பேசும் வட – கிழக்கு மாகாண மக்கள் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள், வருகின்றார்கள். சென்ற நூற்றாண்டின் முதற் பகுதியில் சிங்களத் தலைவர்களாகிய சேர் ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜே.சமரவிக்கிரம ஆகியோர் இதை வலிந்து குறிப்பிட்டிருந்தார்கள்.

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் எப்பொழுதுமே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந் துள்ளார்கள் என்று கூறியிருந்தனர். எனவே மதிப்புடனும் மரியாதையுடனும் எமது மக்கள் வாழவேண்டும் என்றால் எம்மை அவ்வாறான சிறப்பியல்புகளுடன் ஏற்கவேண்டும். இரு மரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எம்மக்கள் விரும்புகின்றனர். பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை.

அடிமைப்படுத்தும் மக்கள் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை இல்லையென்றால் வலிந்து வந்து வாழ்வாதாரங்கள் வழங்குவது போல் ஆகிவிடும். பயத்தை ஏற்படுத்தி, வலிந்து தம்வசம் வைத்து, வாழ்வாதாரங்கள் கொடுத்து எம்மக் களை அடிமைகள் போல் நடத்தும் சந்தர்ப்பங்கள் அண்மைக் காலங்களில் எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை காலமும் எமது மக்களிடையே அவர்களின் தேவைகள் பற்றிய ஒரு முழுமையான சகல துறைகள் சம்பந்தமான மதிப்பீடு, சகல மட்டத்திலும், முக்கியமான சர்வதேச உதவி நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்படவில்லை. 2003 ஆம் ஆண்டில் இது நடைபெற்றது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் நிறுவனம் இதைச் செய்தது.

ஆனால் அதன்பின் நடைபெறவில்லை. இது நடைபெறவேண்டும். நாம் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கேட்டதோ சகலதுறை-சகல மட்டத் தேவை பற்றிய ஆய்வறிக்கை எமக்குக் கிடைத்ததோ மனித நல ஆய்வறிக்கை மட்டுமே. அதுவும் எம்மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக அதில் ஆராயப்படவில்லை. மாகாணத்தை மத்தி புறக்கணிக்கின்றது.

எமது காணிகள் மற்றோரின் வசம், உரியவர்கள் உட்செல்ல முடியாத நிலை, வாழ்வாதாரங்கள் வழங்காத நிலை போருக்குப் பின்னரான விரக்தி நிலை என்பன அதில் ஆராயப்படவில்லை. சமூகத்தில் போரின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள நாம் எத்தனிக்கவில்லை. வறுமை நிலைபோக்க வழி வகைகள் ஆராயப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து மக்கள் தேவைகளை ஆராய முற்படவில்லை. இது போர் முடிவடைந்த உடனேயே நடைபெற்றிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக மேலிருந்து தமக்கு உகந்ததைத் தரவே மத்திய அரசு விரும்புகின்றது. கீழ்மட்டத்தில் மக்கள் அறிந்துணர்ந்து செயற்பட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்தே மக்கள் சேவையில் ஈடுபட மத்தியானது விரும்புகின்றது.

ஏமாற்றம் 2003ஆம் ஆண்டில் நடைபெற்றது போல முழுமையான தேவைகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகளைப் பெற்று மாகாண அபிவிருத்திக்கான மேன்மைத்திட்டம் ஒன்றை உருவாக்கி மக்களின் கருத்துக்களைச் செவிமடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த விழைந்தால் நாம் அதற்கு ஒரு போதும் தடையாக இருக்கமாட்டோம். மாறாக எமது தற்போதைய நிலையை அறிய விரும்பாமல் எமது பாதிப்புக்களை பல மட்டங்களிலும் ஆய்வு செய்ய எத்தனிக்காமல், முழுமையான முன்னெடுப்புகளை முடுக்கிவிட மனம் இல்லாமல், மனித தேவைகளின் ஒரு அங்கத்தை மட்டும் வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுவது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது என்றார்.

Comments
Loading...