Designed by Iniyas LTD
இலங்கையின் மனித உரிமை ஆணையக் குழுவின் தலைவராக தீபிகா உடகம நியமனம்
இலங்கை மனித உரிமை ஆணையக்குழுவின் தலைவராக தீபிகா உடகம நியமிக்கப்பட்டுள்ளார். 19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவராக தீபிகா உடகம(deepika udakama) பணியாற்றி வரும் நிலையில், தற்போது அவர் இலங்கை மனித உரிமை ஆணையக்குழுவின் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணை அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், மனித உரிமை ஆணையத் தலைவரின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.