Designed by Iniyas LTD
மத்திய தலைமை தகவல் ஆணையராக ஆர்.கே மாத்தூர் நியமனம்
இந்திய பாதுகாப்புத்துறையின் முன்னாள் செயலரான ஆர்.கே மாத்தூர் (62) தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வந்த விஜய் ஷர்மாவின் பதவிக்காலம் டிசம்பர் 1 ஆம் தேதியோடு முடிவடைந்ததையடுத்து ஆர்.கே மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதாவது தனது 65 வயதை பூர்த்தி செய்யும் வரை இவர் அப்பகுதியில் இருப்பார்.
கான்பூர் ஐஐடி-யில் படித்த ஆர்.கே மாத்தூர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.