தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: உச்ச நீதிமன்றம்

supreme_court-12345நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஹெகர் முன்னிலையில் நடைபெற்றது.

 அப்போது ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோதகி, கொலிஜியம் முறையில் யாரையெல்லாம் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றங்கள் பரிந்துரை செய்யும் பெயர்களை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அவர்கள் பற்றிய விவரங்களை பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் முகுல் ரோதகி தெரிவித்தார்.

 இதையடுத்து, கொலிஜியம் முறையை மேம்படுத்த நான்கு கருத்துகளை உச்சநீதிமன்றம் தெரிவிக்க விரும்புவதாக நீதிபதிகள் கூறினர்.

 கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கு தகுதி இருக்க வேண்டும், கொலிஜியம் ஒரு அமைப்பாக செயல்படு வேண்டும், அது புகார்களை கருத்தில் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments
Loading...