Designed by Iniyas LTD
இலங்கை கிரிகட் வீரர்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சூதாட்ட தரகர்கள் இலங்கை வீரர்களான குஷால் பெரேரா மற்றும் ஹேரத்தை அணுகியது தற்போது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது விசாரணையை முழுவீச்சில் தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தயசிறி ஜெயசேகரா கூறுகையில், “ஒருவர் குஷால் பெரேரா மற்றும் ரங்கனா ஹேரத்தை அணுகி, “அதிகப்படியான பணம் தருகிறேன். நீங்கள் குறைந்த ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆக உதவி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். முதலில் குஷாலை தான் அவர் அணுகியுள்ளார். அவர் மறுப்பு தெரிவிக்க, பின்னர் ஹேரத்தை நாடியுள்ளார். அவரும் மறுப்பு தெரிவிக்க அதிகாரிகள் உஷார் ஆகியுள்ளனர்.
அவர்கள் சுமார் 70 ஆயிரம் டொலர்கள் பணம் தருவதாக வீரர்களிடம் கூறியுள்ளார். இந்த தொடரில் இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றது. இல்லையெனில் சூதாட்டக்காரர்கள் அதிகப்படியான லாபம் அடைந்திருப்பார்கள். பொலிசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இதே போல் சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த தென்ஆப்ரிக்கா அணியைச் சேர்ந்த ஒரு வீரரை சூதாட்டக்காரர் பேசுவதற்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், அந்த வீரர் உடனடியாக கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் கொடுத்து விட்டார்.