தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிறுத்தப்படமாட்டாது- கெஹலிய ரம்புக்வெல்ல

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படமாட்டாது. அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.ஹெகலிய ரம்புக்கெல

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை குறித்து பல்வேறு அபிப் பிராயங்களும் தெரிவிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், எதிர் காலத்தில் மாணவர்களுக்கும், பெற் றோருக்கும் அழுத்தம் ஏற்படாத வகையில் அதில் மாற்றம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரை

செய்திருந் தது. ஆனால், புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் அமைச்சரவை இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அது குறித்து அமைச்சரவைக் கூட்டங்களில் ஆராயப்பட்டபோதும் இதுவரை எதுவித அமைச்சரவைப் பத்திரமோ சமர்ப்பிக்கப்படவில்லை.

கல்வித்துறையின் மேம்பாட்டுடனும், பாடசாலை அபிவிருத்தியுடனும் எதிர்காலத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் கொண்டுவரப்படும். ஏனைய நாடுகளில் 8ஆம் வகுப்பிலேயே இவ்வாறான பரீட்சைகள் நடைபெறுகின்றன.

இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். புலமைப்பரிசில் பரீட்சையில் 2016ஆம் ஆண்டில் மாற்றம் ஏற்படும் என்று உறுதியாகக் கூறமுடியாது. கல்வித்துறை மேம்பாட்டுடன் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அழுத்தங்களை குறைத்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.

Comments
Loading...